tamilnadu

குமரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நாகர்கோவில், ஜுன் 3- குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் பேச்சிப் பாறை அணையில் ஒரே நாளில் ஒன்றரை அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இரண்டரை அடியும் உயர்ந்துள்ளது. சிற்றாறு-1-ல் அதிகபட்சமாக 80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. திற்பரப்பு அருவி யில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மலையோர பகுதிகளில் மழை கொட்டி வரு கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற் றாறு-1, சிற்றாறு- 2 உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் புதனன்று காலை 37.10 அடி யாக இருந்தது. அணைக்கு 2,203 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக் கிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 43.85 அடியாக இருந்தது. அணைக்கு 1,289 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு: (மில்லி மீட்டரில்) பேச்சிப்பாறை -51.4, பெருஞ்சாணி-64.2, சிற்றாறு-1-80, சிற் றாறு-2-52, மாம்பழத்துறையாறு-20, இரணி யல்-18.6, ஆணைக்கிடங்கு-11.2, குளச்சல் -24, குருந்தன்கோடு-10, அடையா மடை-22, கோழிப்போர்விளை-28, முள்ளாங்கினாவிளை-60, புத்தன்அணை- 63, திற்பரப்பு-24, நாகர்கோவில்-6.2, பூதப்பாண்டி-3.6, சுருளோடு-41.2, பால மோர்-32, மயிலாடி-11.2, கொட்டாரம்-7.2. நாகர்கோவிலில் புதனன்று அதி காலை வீசிய சூறைக்காற்றிற்கு மணி மேடை பகுதியில் நின்ற பழமை வாய்ந்த நாவல் மரம் ஒன்று முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்தது. தகவல் அறிந்ததும் நாகர் கோவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடு பட்டனர். மின் வாரிய ஊழியர்கள் அறுந்து கிடந்த மின் வயர்களை சரி செய்தனர்.