குழித்துறை, ஆக.19- குமரி மாவட்ட வருவாய்த்துறை பறக்கும் படையினர் குளச்சல் கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக தார்பாயால் மூடப்பட்ட இடங்க ளை சோதனை செய்தனர். அதில் சிறு சிறு மூடைகளில் சுமார் 4000 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்த அரிசி, உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்ப டைக்கப்பட்டது. விசாரணையில் அரிசி யை கேரளாவுக்கு கடத்தி செல்வ தற்காக பதுக்கி வைத்திருந்ததாக தெரிய வருகிறது. மேலும் பதுக்கிய நபர் யார் என்பது பற்றி விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.