tamilnadu

img

களியக்காவிளை பேரூராட்சி குப்பைக் கிடங்கில் மாஸ்க், கையுறைகள் குவிப்பால் கோவிட் பரவும் அபாயம்

நாகர்கோவில், ஜூன் 30- குமரி மாவட்டம் களியக்கா விளை பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சேக ரிக்கப்படும் குப்பைகள் மீனச்சல் பகுதியில் களியக்காவிளை பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு மற்றும் வளம் மீட்பு பூங்கா வில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியில் வளம் மீட்பு பூங்கா செயல்படுகிறது. இன்னொரு பகுதியில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் பிளாஸ்டிக் , இறைச்சி கழிவுகள் போன்ற கழிவுகள் தனி தனியாக பிரிக்காமல் பல ஆண்டுக ளாக ஒன்றாக கொட்டி வருகிறது பேரூ ராட்சி நிர்வாகம்.   மேலும் தமிழக கேரளா எல்லை யில் கோவிட் 19  சோதனை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் இருந்தும் உபயோ கித்த பின் வீசப்படும் முக கவசங்கள், கையுறைகள், மருத்துவ கழிவுகளும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் இதே குப்பைக்கிடங்கில் கொட்டி வருகின்றனர். இதனால் தற்போது குப்பை கிடங்கானது நிரம்பி  அந்த பகுதியில் உள்ள சாலையில் விழுகிறது. இதனால் அப்பகுதி மக்களிடையே நோய் தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலர் மற்றும் சுகாதார துறைக்கு பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. கோவிட் 19 தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளிலிருந்து சேக ரிக்கப்படும் குப்பைகள் சாலையில் நிரம்பி வழிவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே இந்த குப்பை கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.