tamilnadu

img

ரூபாய் 15 ஆயிரம் நிவாரணம் கோரி ஆட்டோ தொழிலாளர்கள் மனு

நாகர்கோவில், மே 21- சமூக இடைவெளியுடன் ஆட் டோக்கள் இயக்க அனுமதி வழங்க வேண்டும், நிவாரணம் ரூபாய் 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் கன்னி யாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு, தமிழகத்தில் நான்காவது கட்ட ஊரடங்கு மே 31 வரை அறி விக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்க ளாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடு மையான வறுமையையும், நெருக்கடி யையும் ஆட்டோ தொழிலாளர்கள் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆட்டோ சம்மேளனம், அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் ரூபாய் 15 ஆயிரம் நிவாரணம் கேட்டும், 17 க்கு பிறகு சமூக இடை வெளியை கடைபிடித்து ஆட்டோ ககளை இயக்க அனுமதி கேட்டும் மே 16 ஆம் தேதியன்று முதல்வருக்கு இமெயில் மூலம் மனுக்கள் அனுப் பப்பட்டது. ஆனால் மனுக்கள் பரி சீலிக்கப்படவில்லை.

 முடி திருத்தும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் இல்லாதவர்களுக் கும் நிவாரணம் அறிவிக்கப் பட் டுள்ளதை வரவேற்கிறோம். இதே போல் பாதிப்பில் இருக்கும் ஆட்டோ தொழிலாளர் அனைவருக்கும் நிவா ரணம் வழங்க வேண்டும். நலவாரி யத்தில் வழங்கப்பட்டுள்ள நிவாரண மும், நலவாரியத்தில் பதிவு செய் துள்ள அனைத்து தொழிலாளர் களுக்கும் கிடைக்காத நிலைதான் தொடர்கிறது. நான்காம் கட்ட ஊர டங்கில் ஆட்டோக்களுக்கு தளர்வு இருக்கும் என எதிர்பார்த்த நிலை யில், ஆட்டோக்கள் இயக்க அனுமதி யும் வழங்கப்படவில்லை. நிவாரண மும் வழங்கப்படவில்லை. இது ஆட்டோ தொழிலாளர்களுக்கு பெருத்த அதிர்ச்சியையும், வேதனை யையும் அளித்துள்ளது.

எனவே சமூக இடைவெளியோடு ஆட்டோக்கள் இயக்க அனுமதி தருவதோடு, ஆட்டோ தொழிலாளர்களின் குடும் பம் வாழ ஒவ்வொரு குடும்பத் திற்கும் ரூபாய் 15ஆயிரம் நிவா ரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப் பட்டுள்ளது.  இந்த மனுவை மாவட்ட தலைவர் மரிய ஸ்டீபன், மாவட்ட செயலாளர் பொன்.சோபனராஜ், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.அந்தோணி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். 

திருநெல்வேலி
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.முருகன் தலைமை தாங்கினார். போராட் டத்தில் சிஐடியு மாவட்டச் செய லாளர் ஆர்.மோகன், ஆட்டோ ஓட்டு னர் சங்க மாவட்டத் தலைவர் காம ராஜ், சிஐடியு மாநிலக்குழு உறுப்பி னர் பெருமாள், சிஐடியு நிர்வாகி கள் எம்.சுடலைராஜ், ஜோதி வண்ண முத்து,சிபிஎம் பாளை தாலுகா செயலாளர் வரகுணன் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கை மனு மாவட்ட வருவாய் அலுவலரி டம் கொடுக்கப்பட்டது. ராதாபுரம், தென்காசியிலும் போராட்டம் நடைபெற்றது.