tamilnadu

காவல் உதவி ஆய்வாளர் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி உண்ணாவிரதம்

நாகர்கோவில்,  ஜூலை 16- வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனிங ல்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  பார்வதிபுரம் அனந்த னாறு கால்வாயில் படித் துறையை ஆக்கிரமித்த பிரச் சனையில் கடந்த ஜூன் 14 ஆம் தேதியன்று உதவி ஆய் வாளர் அனில்குமார் ரியல் எஸ்டேட் உரிமையாளர் இ. ஜெயக்குமாருக்கு ஆதர வாக பொதுமக்கள், விதொச, சிபிஎம் தலைவர்கள் மலை விளைபாசி அவரது மனைவி உஷாபாசி ஆகியோரை அவமரியாதையாக நடத்திய துடன், 20 பேர் மீது பொய் வழக்கு போட்டுள்ளார். இது சம்பந்தமாக அந்த உதவி ஆய்வாளர் மீது உரிய நடவ டிக்கை எடுக்குமாறு மனு பல மட்டத்தில் கொடுத்த பின்னும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுத்த தாக தெரியவில்லை.  இந்நிலையில் வியாழ னன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக் கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்து மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்று கொண்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பா ளர் காவல் உதவி ஆய்வாளர் மீதான புகார் தொடர்பாக முதற் கட்ட விசாரணை நடை பெறுகிறது என உறுதியளித் ததை தொடர்ந்து உண்ணா விரத போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.