tamilnadu

மாற்றுத்திறனாளியின் சொத்தை அபகரிக்க முயற்சி நிலத்தை மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு

நாகர்கோவில், ஆக.13- குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே  பண்டாரவிளை பகுதியை சேர்ந்த விஜயன்  என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:  நான் மாற்றுத்திறனாளி. உண்ணாமலை க்கடை பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டார விளை என்னுமிடத்தில் எனது மூதாதையர்க ளால் முக்கால் சென்ட் இடம் கல்லறைக்கு ஒது க்கப்பட்டது. இதில் எனது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா ஆகியோரது உடல்கள் அட க்கம் செய்யப்பட்டு அதன் மேல் கல்லறை கள் கட்டப்பட்டு நான்கு பக்கமும் மதில் சுவர் கட்டி பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் எனது சொத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் போலி ஆவணங்கள் தயார் செய்து கடந்த ஆக.1 அன்று இரவு 12  மணியளவில்  நான்கு கல்லறைகள் அமை ந்துள்ள இடத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து அதனை தரைமட்டமாக்கினார்.

மேலும் கல்லறை இடர்பாடுகளையும் புதை க்கப்பட்ட உடல்களையும் டெம்போவில் ஏற்றி  அங்கிருந்து அகற்றி சென்றனர். இதுகுறித்து நான் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜெகன் அவர்களுக்கு உதவிய டெம்போ ஓட்டுநர், ஜேசிபி ஓட்டுநர் மற்றும் மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் ஆதிலிங்க போஸ் ஆகி யோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது நிலத்தை மீட்டு அங்கிருந்து தூக்கி சென்ற உடல்களை அதே இடத்தில் மீண்டும் அடக்கம் செய்ய உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.