நாகர்கோவில், ஜூலை 16- பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு, 4ஜி சேவை வழங்க மத்திய அரசு உடனடியாக அனுமதிக்க வேண்டும், பிஎஸ்என்எல் புத்தாக்கத்திற்கான திட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமலாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பு தலைவர் எஸ்.லெட்சுமண பெருமாள் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பி.ராஜூ, நிர்வாகிகள் செல்வராஜன், ஸ்டாலின், அச்சுத ஆனந்த் ஆகியோர் பேசினர். பி.ஆறுமுகம், மீனாட்சி சுந்தரம், செல்வம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.