districts

img

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, செப். 13- குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7850ஐ  அகவிலைப்படியுடன் வழங்கிட வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு  மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகில் திங்களன்று (செப் 13)  மாவட்ட செயலாளர் பி.வி.ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குடும்ப ஓய்வூ தியம் வழங்கப்பட வேண்டும், மருத்துவப் படி, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்,  ஈமகாரியத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்கிட  வேண்டும்,இலவச பேருந்து அட்டை வழங்கிட வேண்டும், ஓய்வுக்கால பணிக்கால  பலன்களை  உடனடியாக  வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட நிர்வாகிகள் ராம லிங்கம், சசிரேகா, தேவி, சத்துணவு ஊழியர்  சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.பாபு, அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் பி.பன்னீர் செல்வம், வட்டத் தலைவர் ஒ.செல்வ மணி,  உள்ளிட்ட  பலர் பேசினர்.