tamilnadu

img

உத்திரமேரூர்: பாய்லர் வெடித்து 2 பேர் பலி

உத்திரமேரூர் அருகே பாய்லர் வெடித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டியில் தனியார் இரும்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக பாய்லர் வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் பொத்தேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெடி விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.