திருப்பெரும்புதூர், மே 22-திருப்பெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் “கூலிங் அட்டை” தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட தொழிலார்கள் வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில், புதனன்று (மே 22) காலை தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென்று தீ பற்றி எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியில் ஓடினர்.தீ விபத்து பற்றி அறிந்ததும் திருப்பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், காஞ்சிபுரம், ஆகிய பகுதியில் இருந்து 5 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, 2 மணிநேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பெரும்புதூர் காவல்துறை ஆய்வாளர் விநாயகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.