தேஜோ தொழிற்சாலையில் ஊதிய உயர்வு உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஏப்ரல் 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம்.சந்திரசேகரன், சாலை போக்குவரத்து மாவட்டச் செயலாளர் எஸ். செல்வராஜ், நிர்வாகிகள் வேலு, ஏ.நடராஜன், லையன்ஸ் கிளப் நிர்வாகி பாலாஜி உட்பட பலர் பேசினர். போராடி வரும் தொழிலாளர்களுக்கு 50 கிலோ அரிசியை வழங்கினர்.