tamilnadu

அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பேட்டி

காஞ்சிபுரம், மார்ச் 23- கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை யாக பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு பெரிய வணிக வளாகங்கள், நிறு வனங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும்  இடங்களான கோயில், திரையரங்குகளை யும் மூட உத்தரவிடப்பட்டுள்ளதால் பொது மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் இந்தியா முழுமையும் மக்கள் ஊர டங்கு மார்ச் 22 இரவு 9 மணியுடன் முடிவ டைந்த நிலையில் தமிழகத்தில் மார்ச் 23 காலை 5 மணிவரை நீட்டிக்கப்பட்டது. மேலும்  தமிழகத்தில் சென்னை, காஞ்சி, ஈரோடு ஆகிய  3 மாவட்டங்களை தனிமைப்படுத்தி சீல்வைக்க மத்திய அரசு ஆலொசனை கூறியுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி யர் பா.பொன்னையா ஞாயிறன்று இரவு செய்தியாளர்கள் சந்தித்து கூறியதாவது: காஞ்சிபுரத்தில் வெளிமாநில மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகமாக பணியாற்றுவதால் காஞ்சிபுரம் மாவட்டம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற் சாலைகளுக்கும் யார் வந்தாலும்,வெளியில் சென்றாலும் கை கழுவும் திரவத்தைப் பயன் படுத்திய பிறகே அனுமதிக்க வேண்டும் என  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொழிற் சாலைகளில் தேவையில்லாத நபர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் குறைந்த அளவு பணியாளர்களை வைத்து பணி யாற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கரோனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தால்  உடனடியாக காஞ்சிபுரம் மாவட்ட கட்டுப் பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொழிற் சாலைகளில் பணிபுரிவோரில் சந்தேகம் ஏற் பட்டால் அடிக்கடி காய்ச்சலை அளவிடும் கருவியை பயன்படுத்தி காய்ச்சலை உறுதி  செய்து கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தால் கட்டுப்பாட்டு அறைக் கும் தெரிவிக்கலாம். கடந்த ஒரு மாதத்தில் வெளிநாட்டி லிருந்து வந்தவர்கள் யாரேனும் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களோ அல்லது அவர்க ளது உறவினர்களோ தகவல் தெரிவித்தால்  அவர்களது இடத்துக்கு மருத்துவக்குழு சென்று அவர்களை பரிசோதிக்கும்.வீட்டி லேயே இருக்குமாறு செய்து அவர்களுக்கு மருத்துவமும் பார்க்கப்படும். பிளஸ் 1 தேர்வு  திங்கள்கிழமை தொடங்குவதால் தேர்வு எழுத  வரும் அனைத்து மாணவர்களையும் கை கழு வும் திரவத்தை பயன்படுத்திய பிறகே தேர்வு  எழுத அனுமதிக்கப்படுவார்கள்,மருத்து வர்கள் குழுவும் அவர்களை கண்காணிக்கும். இம்மாதம் 31 ஆம் தேதி வரை அதிகமாக  கூட்டம் கூடக்கூடிய பெரும் கடைகள் அனைத்  தும் அவசியமாக மூடப்பட்டிருக்க வேண்டும். அதே நேரத்தில் பொதுமக்களுக்கு அத்தியா வசியமான பொருள்கள் தடையின்றி கிடைக்க  நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்  டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனை களையும் தயார் நிலையில் வைக்க உத்தர விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.   இந்தப் பேட்டியின்போது, மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி, மாவட்ட  வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, துணை  ஆட்சியர் சரவணன், பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஜீவா உள்ளிட்ட அதிகாரி கள் உடன் இருந்தனர்.