இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருநாவலூர் மேற்கு ஒன்றியக்குழு சார்பில் குமார், ஆனந்தன் நினைவு நாளையொட்டி களமருதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமை சிபிஎம் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை துவக்கி வைத்தார். இதில் மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, செயலாளர் வே.ஏழுமலை, இணைச் செயலாளர் மு.சிவக்குமார், ரத்ததான கழக மாவட்ட அமைப்பாளர் வி.மார்த்தாண்டன், ஒன்றியத் தலைவர் பி.பத்மநாபன், செயலாளர் ஏ.தங்கமணி, பொருளாளர் வி.காரல்மார்க்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.