தஞ்சாவூர், மார்ச் 6- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி திரு மண மண்டபத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேராவூரணி கிளை சார்பில் 13 ஆவது ரத்ததான முகாம் மற்றும் இலவச ரத்த வகை கண்டறிதல் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தவ்ஹீத் ஜமாத் கிளை தலைவர் ஒய். முகமது கனி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளா ளர் அப்துல் ஹமீது, மாவட்ட மருத்துவ அணி செயலா ளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராவூ ரணி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மருத்து வர் கே.காமேஸ்வரி தேவி, தர்ஷனா மருத்துவமனை மருத்துவர் துரை.நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில், தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவ மனை ரத்த வங்கி குழுவினர் கலந்து கொண்டு, நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்த வகை கண்டறிந்தனர். மேலும் 56 பேரிடம் ரத்த தானம் பெற்றனர். முகாமில், சேகரிக்கப் பட்ட குருதிக் கொடை தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.