இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காஞ்சிபுரம் நகரக்குழு, முருகன் நெசவாளர் குடியிருப்பு பகுதி இளைஞர்கள் சார்பில் முருகன் காலனியில் நகரத் தலைவர் இ.சங்கர் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை வாலிபர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் சி.பாலசந்திரபோஸ் துவக்கி வைத்தார். இதில் அரசு மருத்துவ மனை ரத்த வங்கி பொறுப்பாளர் மருத்துவர் தாமரை நங்கை, வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.எல்.கார்த்திக், மாவட்டச் செயலாளர் எஸ்.உதயகுமார், நகரச் செயலாளர் கே.யுவராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.