கடலூர், மே 24- கடலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கூடுத லாக 300 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள் ளார். 10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மையங்க ளில் தனி மனித இடைவெளியை பின்பற்று வது, 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ. அன்புச்செல்வன் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்வினை 35,546 மாணவர்கள் எழுத உள்ளனர். அதில் ஆண்கள் 18,341, பெண்கள் 17,205. கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தேர்வு மையங்கள் 143இல் இருந்து 443 மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு போதிய பாதுகாப்பு வசதி கள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கான மையங்களும் 2இல் இருந்து 8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இப்பணி யில் 1,800 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படு கின்றனர். மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தேர்வு நடை பெறும் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் காலை, மாலை கிருமி நாசினிகள் தெளித்து தூய்மைப்படுத்தப்படும். இந்த பணிகளை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சித்துறை) தலை மையில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை கொண்டு குழு அமைத்து கண்காணிக்கப்ப டும்.
மாணவர்கள் தங்கள் தேர்வெழுதும் பள்ளிக்கு செல்ல வசதியாக அரசு பேருந்து கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. பேருந்து இயக்க நடவடிக்கை களை கண்காணிக்க மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது. மேலும் தேர்வெழுத வரும் மாண வர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் 3 முகக் கவசங்கள் வழங்கவும், அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினிகள் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் அச்சமின்றி தேர்வெழுத அனைத்து வித மான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜகிருபாகரன், கூடுதல் ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா, சார் ஆட்சியர்கள் கே.ஜெ. பிரவின்குமார், விசுமகாஜன், கோட்டாட்சியர் ப.ஜெகதீஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.ரோஸ்நிர்மலா மற்றும் வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.