சிதம்பரம்,மார்ச் 8- உலக மகளிர் தினத்தை யொட்டி சிதம்பரத்தை அடுத்த ஓமக்குளம் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்த அனைத்து பெண்களுக்கும் குங்குமம் வைத்து வரவேற்று இரு கைகளுக்கும் வளையல்கள் அணிவித்து கவுரவித்தனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு கைகளில் வளையல்கள் அணிந்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் குமராட்சி ஒன்றிய பெருந் தலைவர் பூங்குழலிபாண்டி யன், பங்க் உரிமையாளர் சண்முகசுந்தரம் குடும்பத்தி னர் கலந்து கொண்டனர். காலை 9 மணி முதல் மாலை வரை வரும் அனைத்து பெண்களுக்கும் வளையல் அணிவித்தனர். அதேபோல் சி.தண் டேஸ்ரநல்லூர் கிராமத்தி லுள்ள பிரிலியண்ட் மழை லையர் மற்றும் தொடக் கப்பள்ளியில் பயிலும் மாண வர்களின் அம்மாக்களுக்கு மகளிர் தினத்தில் பாரம்பரிய உணவு வகைகளை மீட்கும் வகையில் உணவுத் திரு விழா போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஜி. மாரியப்பன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தி னர்களாக தனியார் உணவு விடுதியின் உணவு மேற் பார்வையாளர்கள் ராஜ சேகரன், அரசுப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்கள் இளஞ்செழியன், சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு உணவு வகைகளை தேர்வு செய்தனர். இதில் மாணவர்களின் அம்மாக்கள் 42 பேர் இயற்கை முறையில் சமைத்த அரிசிபுட்டு, திரட்டு பால், பனங்கிழங்கு லட்டு, தென்னை பாயாசம், குதிரைவாலி, கடலைபருப்பு புட்டு, கேழ்வரகு கொழுக் கட்டை, சிகப்பரிசி புட்டு, பச்சைபயிறு பாயாசம், தினை லட்டு, மூங்கில் அரிசி பாயாசம் உள்ளிட்ட பல்வேறு வகையான இயற்கை பாரம்பரிய உணவுகளை சமைத்திருந்தனர். இதில் மூன்று நிலைக ளில் தேர்வு பெற்ற 5 பேருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து பள்ளி யின் தாளாளர் கலா கூறுகை யில்,“மனித உடலில் உணவு முறை சரியாக இருந்தால் எந்த நோயும் வராது. தமிழ் கலாச்சாரத்தில் பல உணவு முறைகள் அழிந்து வரு கிறது. அதனை மீட்கும் வகையில் மகளிர் தினத்தில் மாணவர்களின் அம்மாக்க ளுக்கு இயற்கையான பாரம்பரிய உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டது” என்றார்.