கடலூர், ஜூலை 27- மனிதனுக்கு உற்சாகம் அளிக்கும் விஷ யங்களில் ஒன்று சுற்றுலாவாகும். வெளியூர் களிலுள்ள சுற்றுலாத் தளங்களுக்கு அடிக்கடி செல்லமுடியாத நிலையில், உள்ளூர்களி லுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை செல்வதை பெரும்பான்மை யானோர் வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு செல்பவர்களுக்கு அங்குள்ள சிறு உணவக விற்பனை கடைகளும், அலங் கார பொருட்கள், பெண்களுக்கான வளை யல், காதணி, சிறுவர்களுக்கான விளை யாட்டுப் பொருட்கள் என்ற பலவகையான பொருட்கள் அவர்களை கவரும். இதனை நம்பி சுற்றுலாத்தலங்கள், வழிபாட்டுத் தலங்களின் அருகில் ஏராளமான கடைகள் இருக்கும். கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை யில் வெள்ளி கடற்கரை, சிதம்பரம் நடராஜர் ஆலயம், கிள்ளையிலுள்ள படகு குழாம், விருத்தாசலம், திருவந்திபுரம் கோயில் போன்றவை சிறந்த பொழுதுபோக்கு மற்றும் ஆன்மீகத் தலங்களாக உள்ளன. இதில், சுமார் 500 பேர் சிறிய அளவிலான தள்ளுவண்டி களிலோ, தரையிலோ கடை அமைத்துள்ள னர்.
தற்போதைய கொரோனா பொதுமுடக் கத்தால் சுற்றுலாத்தலங்கள், ஆன்மிகத் தலங் கள் மூடப்பட்டன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப் பட்டுள்ளது. தங்களது கடைகளை மார்ச் மாதம் 24 ஆம் தேதி மூடியவர்கள் இதுவரை திறக்காமல் 120 நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதுகுறித்து வெள்ளி கடற்கரை சிறு வணிகர்கள் நலச்சங்கத்தின் தலைவர் கு.பரிதிவாணன் கூறுகையில், சுற்றுலாத் தலம், ஆன்மிக தலங்களில் ஒவ்வொரு வாரத் திலும் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனினும், மற்ற நாட்களிலும் இத்தகைய கடைகள் அங்கே செயல்படும். குறிப்பிட்ட நாட்களில் அதிக வியாபாரமும் மற்ற நாட்களில் கூலி கூட தேறாத நிலையிலும் வியாபாரம் இருக்கும்.
கொரோனா பொதுமுடக்கத்தால் இத்தகைய சிறுவணிகர்கள் முழுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. ஆனால் குறைந்த அளவு வணிகர்களே நலவாரி யத்தில் முறையாக பதிவு செய்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற சுற்றுலா, ஆன்மிக தலங்களில் கடை வைத்தி ருக்கும் சிறு வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். மேலும், மீண்டும் தொழில் துவங் கும் வரை மாற்றுத் தொழிலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே கடன் வாங்கி தொழில் செய்து வரும் இவர்கள் தற்போ தைய சூழலில் கடுமையான கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பதை மத்திய, மாநில அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.