சிதம்பரம் (தனி) தொகுதி திமுக தலையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது
தொகுதிக்குட்பட்ட சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி ஆகிய சட்டமன்ற தொகுதியிலுள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், வணிக சங்கத் தலைவர்களை சந்தித்து வாக்குகள் கோரி வருகிறார். சிதம்பரம் வர்த்தக சங்க அலுவலகத்தில் சங்கத் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வணிகர்களி டம் உரையாற்றிய திருமாவளவன்,“ கடந்த ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் வணிகர்கள் பட்ட துன்பங்களை எடுத்துரைத்தார்” திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வர்த்தகச் சங்க செயலாளர் முருகப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் பெரிய மார்க்கெட், தெற்குவீதி, மேலவீதிகளில் கூட்டணி கட்சியினருடன் ஆதரவு திரட்டினார்.