சிதம்பரம்,அக்.24- கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாதாளச் சாக்கடைத் அமைக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. திட்டம் முழுமை பெறாத நிலையில் 33 வார்டு களில் பணிகள் முடிந்தும் சாலை போடாத தால் சேறும் சகதியுமாக அந்த பகுதியில் உள்ள சாலைகள் உள்ளது. மேலும் குடி நீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள், முதிய வர்கள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து பாதிக்கப் பட்டனர். இதுகுறித்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் சமூக வலைத்தளங் களில் சிதம்பரம் நகராட்சி நிர்வாகத்தை கடு மையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் முத்து தலை மையில் அந்த பகுதி மக்கள் நகராட்சி அதிகாரி களை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது, துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாற்று நடும் போராட்டம் நடை பெறும் என்றும் எச்சரித்தனர். இதனையடுத்து, சம்பந்தபட்ட அதிகாரி கள் அந்த வார்டுகளில் கொட்டும் மழையில் சாலைகள் போடுவதற்கு கருங்கற்களை நிறவி சேறும் சகதியாக இருந்த சாலையை மாற்றியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த முயற்சியால் சாலை போடுவதற்கான பணி கள் நடப்பதை அப்பகுதியில் உள்ள மக்கள் வரவேற்றுள்ளனர்.