districts

img

சிபிஎம் கவுன்சிலர் தொடர் முயற்சியால் சாலை அமைக்கும் பணி துரிதம்

சென்னை, மார்ச். 1- 15 ஆண்டுகளாக பரா மரிக்கப்படாத நிலையில் இருந்த சாலை சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஆர். ஜெயராமன் தொடர் முயற்சி யால் தரமான தார் சாலை  அமைக்கும் பணி துவங்கி யது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்ட லம் 4ஆவது வட்டத்திற்குட் பட்டது மஹாலஷ்மி நகர், பாலாஜி நகர். மணலி எக்ஸ்பிரஸ் சாலையுடண் இணைக்கும் இந்த இரண்டு நகர்களின் பிரதான சாலை கடந்த 15 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக மாறி விட்டன. சாலையை சீரமைக்கக் கோரி கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சார்பில் நாற்று நடும்  போராட்டம் அறிவிக்கப் பட்டது. அப்போது நடை பெற்ற பேச்சுவார்த்தையில் மாநகராட்சி அதிகாரிகள் இந்த சாலை மாநகராட்சிக்கு சொந்தமானதல்ல. நெடுஞ் சாலைத் துறைக்கு சொந்த மானது. எனவே நெடுஞ் சாலை துறைதான் சீரமைக்க  வேண்டும் என்று தெரிவித்த னர். ஆனால் நெடுஞ் சாலைத்துறை அதிகாரி களோ இந்த சாலை எங்க ளுடையது அல்ல என்று  எழுத்து மூலமாக தெரிவித்து விட்டது. இதற்கிடையில் மாநகராட்சி நிர்வாகம்  சாலையை சீரமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை இந்நிலையில் 4ஆவது  வார்டு மாமன்ற உறுப்பி னராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்.ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டார். அவரது தொடர் முயற்சியின் காரண மாக 52 லட்ச ரூபாய் மதிப் பீட்டில் (390 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலம்) தார் சாலை  அமைக்கும் பணி புதனன்று (மார்ச் 1) துவங்கியது. இந்த பணி துவக்க நிகழ் வில் ஆர்.ஜெயராமன் எம்.சி, உதவி பொறியாளர்கள் ஜெயக்குமார், கோதண்ட ராமன். மஹாலஷ்மி நகர் தலைவர் கதிர்வேல், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் குப்பன், மாதர் சங்க வடசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம், சிபிஎம் பகுதிக் குழு உறுப்பினர்கள் வெங்கட்டையா, புஸ்பா, செல்வகுமாரி, அலமேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையொட்டி பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.