tamilnadu

img

கோயில்களை தொல்லியல்துறை எடுப்பது ஆபத்தானது: தொல் திருமாவளவன்

சிதம்பரம், மார்.9- சிதம்பரத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சிவக்கம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்தில் மருத்துவ முகாம் நடை பெற்றது. சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன்   முகாமை துவக்கி வைத்தார். பின்னர் முகாமில் கலந்துகொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்ட கம் மற்றும் கண்நோய் குறைபாடு உள்ளவர்க ளுக்கு மூக்குக்கண்ணாடி களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உசுப்பூர் ஊராட்சி மன்றத் தலை வர் தென்றல்மணி இள முருகு, கடலூர் மாவட்ட சுகா தாரப் பணிகள் துணை இயக்குனர் கீதா, சிவக்கம் வட்டார மருத்துவ அலுவலர் குணபாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கட லூர் தெற்கு மாவட்டச் செய லாளர் பால அறவாழி, மாநில நிர்வாகி தாமரைச்செல்வன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர் அவர்  செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- தில்லி கலவரத்தை மக்களவையில் விவாதிக்க வேண்டும் என 5 நாட்கள் தொடர்ந்து குரல் கொடுத்த காங்கிரஸ் கட்சி எம்.பி களை இடைநீக்கம் செய்துள்ளனர். அவர்களை வரும் 11 ஆம் தேதி கூடும் கூட்டத் தொடருக்கு அனு மதிக்க வேண்டும். வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரத்தை உச்ச நீதிமன்ற கண்காணிப் பில் சிறப்பு புலனாய்வு விசார ணையை நடத்த வேண்டும். தமிழக சட்டசபையில் நடந்துகொண்டிருக்கிறது. அதில் குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றவேண்டும். தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுப்பது ஆபத்தானது. ஒரே தேசம், ஒரே மொழி என்ற கலாச்சாரத்தை நுழைக் கவே முயற்சி செய்கி றார்கள். இதற்கு தமிழக அரசு மௌனம் சாதிக்காமல் அனுமதி இல்லை என அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.