சிதம்பரம்,டிச.29- மார்க்சிஸ்ட் கட்சியின் புவனகிரி முன்னாள் ஒன்றியச் செயலாளர் வெற்றிவேல் (58), கடந்த 13 ஆம் தேதி கால மானார். இவரது படத்திறப்பு விழா புவனகிரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்தார். பின்னர் புவனகிரி ஒன்றிய கட்சி சார்பில் அவரது குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் முதல் தவனையாக நிவாரணம் வழங்கினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜி.மாதவன், மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ராமச்சந்திரன், எஸ்.ஜி. ராமேஷ்பாபு, ஒன்றியச் செயலாளர் சதானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கற்பனைச் செல்வம், மூர்த்தி, ராஜா,அமர்நாத், புதுச்சேரி நகரச் செய லாளர் மதிவாணன், . புவனகிரி நகரச் செயலாளர் மண வாளன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜாகீர் உசேன், ராம லிங்கம், சதீஷ், லெனின், கோவிந்தராஜ்,கதிர்வேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.