சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை உருவாக்கிய அமைப்பாளருமான தோழர் தே.இலட்சுமணனின் முதலாமாண்டு நினைவு தினம் செவ்வாயன்று (ஆக.24) கடைப்பிடிக்கப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில தலைமை அலுவலகத்தில் படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது.மாநிலத் தலைவர் ஜான்சிராணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துணைத் தலைவர் எஸ். சண்முகம் சங்க கொடியை ஏற்றி வைத்தார். உருவப்படத்தை பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் திறந்து வைத்தார். துணைத் தலைவர் பி.எஸ். பாரதி அண்ணா, மாநிலச் செயலாளர் பி. ஜீவா உள்ளிட்டோர் பேசினர்.
அன்னை சிறப்புப் பள்ளியில்...
தோழர் தே.லட்சுமணன் முயற்சியால் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கருணை அறக்கட்டளை உருவானது. அதன் கீழ் இயங்கும் இலவச அன்னை சிறப்புப் பள்ளியில்தே.இலட்சுமணன் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வுக்கு அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலர் பா.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தே.இலட்சுமணன் உருவப் படத்தை அவருடைய இளைய சகோதரரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்டோர் நினை வஞ்சலி உரையாற்றினர்.
சிறுபான்மை மக்கள் நலக் குழு
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுசார்பில் செவ்வாயன்று சென்னையில் நடை பெற்ற நிகழ்வில் தோழர் தே.இலட்சுமணன் உருவப்படத்தை மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது திறந்துவைத்தார். மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், மற்றும் எம்.ராமகிருஷ்ணன், சிபிஎம் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஏ.பாக்கியம், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு, முன்னாள் நிர்வாகிகள் ஆர்.ஜோதி, நெ.இல.ஸ்ரீதரன் கல்வியாளர் தாவூத்மியாகான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் தே.இலட்சுமணன் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.