சிதம்பரம், பிப். 3- கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி யில் நிலுவையிலுள்ள தொழில் வரி, சொத்து வரி, குப்பை வரி உள்ளிட்டவைகளை வசூ லிப்பதற்காக பல்வேறு குழுக்களை அமைத்து வரி வசூல் செய்யும் பணிகளை நகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நகராட்சிக்கு தொடர்ந்து வரி செலுத்தாத கடையின் முன்பு நகராட்சி ஊழி யர்கள் குப்பைத் தொட்டியை வைத்தனர். இதனால் சிதம்பரம் வர்த்தக சங்கத்திலுள்ள உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக திங்களனறு(பிப்.3) கடையடைப்பு போராட் டத்தை நடத்தினர். இதனால் பொதுமக்கள் பல்வேறு விதத்தில் பாதிப்புக்கு உள்ளாகினர். முன்னதாக இதுகுறித்து சிதம்பரம் வட் டாட்சியர் ஹரிதாஸ் தலைமையில் வர்த்தக சங்கத்தினர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார் இதில் உடன் பாடு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.