tamilnadu

img

3 குழந்தைகளை தண்ணீரில் வீசி கொடூரக் கொலை 

 சிதம்பரம், அக்.3- கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சத்தியவதி(27). இவரது கணவர் மணிகண்டன்(35). இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள். கணவர் குடிபோதையில் தினமும் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சத்தியவதி, தனது குழந்தைகளான அக்ஷயா(6), நந்தினி (4), தர்ஷினி (2) மூன்று பேரையும் ஈவு இரக்கமின்றி உயிரோடு சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் அடுத்த ராஜா வாக்காலில் தூக்கி வீசிவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் வியாழனன்று(அக்.3) சேத்தியாதோப்பு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்புத் துறையினரின் உதவியோடு வாய்க்காலில் இறங்கி பல மணி நேரம் தேடி மூன்று குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மூன்று குழந்தைகளையும் கொன்ற தாய் சத்தியவதியை கைது செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். பெற்ற தாயே 3 குழந்தைகளையும் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.