tamilnadu

img

ஆகஸ்ட் 1 நலவாரிய அலுவலகங்கள் முற்றுகை: ஜி.சுகுமாறன் அறிவிப்பு

கடலூர், ஜூலை 6- நலவாரிய சலுகைகளை வழங்கக் கோரி ஆகஸ்ட் 1 அன்று தமிழகத்தில் அனைத்து நலவாரிய அலுவலகங்கள் முன்பு முற்றுகைக் போராட்டம் நடத்தப்படும் என்று ஜி. சுகுமாறன் தெரிவித்தார். இந்திய தொழிற்சங்க மையத்தின் கடலூர் மாவட்ட 12ஆவது மாநாடு கடலூரில் சனிக்கிழமை (ஜூலை 6) நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் மாவட்டத் தலைவராக டி.பழனிவேல், மாவட்டச்  செயலாளராக பி.கருப்பை யன், பொருளாளராக ஜி. குப்புசாமி உள்ளிட்ட 29 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.  பின்னர் மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மாநாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதனை தடுத்து நிறுத்தும் வகையில் சிஐடியுவின் நட வடிக்கை இருக்கும்.  மத்திய  அரசின் நிதிநிலை அறிக்கை யில் பொதுத்துறை நிறுவ னங்களின் பங்குகளை  வேகமாக தனியார்மய மாக்கும் பணியை மேற் கொண்  டுள்ளனர்.  ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி   ரூபாய்க்கு பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்  பட்டுள்ளது. பொதுத்துறை யில் மத்திய அரசு 51 விழுக்  காடு பங்குகளை மட்டும்  வைத்துக் கொண்டு மற்ற வற்றை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை சிஐடியு கண்டிக்கிறது. பொதுத்துறை நிறு வனங்களை பாதுகாக்க சிஐடியு தொடர் போராட் டங்களை முன்னெடுக்கும். பெட்ரோல், டீசல் மீது  மீண்டும் வரியை உயர்த்தி  இருப்பது பொருளாதாரத் தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். என்எல்சியில் உற்பத்தி அதிகரித்த நிலையில் தொழி லாளர்களின் எண்ணிக்கை  குறைந்துள்ளது.  அதேபோன்று நலவாரி யங்களில் சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் வழங்  கப்படுவதை விட குறை வாகவே தமிழகத்தில் நலத்திட்ட உதவித் தொகை  வழங்கப்படுகிறது. இத னைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி நலவாரியங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசு ரயில்வே துறையை பல்வேறு வழி களில் தனியார்மயமாக்க முயற்சித்து வருகிறது. சரக்கு ரயில் சேவை மற்றும்  புனிதத் தலங்களை இணைக் கும் ரயில் சேவையை தனி யார் வசம் ஒப்படைக்க முடிவு  எடுத்துள்ளது கண்டனத் திற்கு உரியது. ஒரே நாடு,  ஒரே மொழி, ஒரே ரேஷன்  கார்டு என்பது ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயலாகும். இது இந்து தேசம் என்பதை நோக்கி பயணிக்கும். அத னால் வருங்காலத்தில் பொது மக்களுக்கும் தொழிலா ளர்களுக்கும் இடையே வேற்றுமைகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் செப்டம் பர் 19திலிருந்து 22ம் தேதி வரை மாநில மாநாடு நடை பெற உள்ளது. அகில இந்திய மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 23ஆம்  தேதியிலிருந்து 27ஆம் தேதி  வரை சென்னையில் நடை பெற உள்ளது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 2,000 தேர்ந்தெ டுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். ஏற்க னவே 2003ஆம் ஆண்டில்  சென்னையில் அகில இந்திய  மாநாடு நடத்தப்பட்டது என்றார்.