கடலூர், ஜூலை 11- மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செய லாளர் அல்லாபிச்சை வெள்ளிக் கிழமை (ஜூலை 10) காலமானார். சிஐடியு கடலூர் மாவட்ட சிறுகடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லாரன்ஸ் ரோடு கிளைச் செயலாளர், கடலூர் நகராட்சி சிறு வியாபாரிகள் குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை அல்லாபிச்சை வகித்தார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர்கள் கோ.மாதவன், எஸ். வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், வி.சுப்பராயன், நகரச் செயலாளர் ஆர். அமர்நாத், ஒன்றியச் செயலாளர் ஜே.ராஜேஷ்கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ஆளவந்தார், கட்டு மான சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் ஏ.பாபு, நடை பாதை சங்க மாவட்டத் தலைவர் சங்கமேஸ்வரன், செய லாளர் சிவானாந்தம், நகரக்குழு உறுப்பினர்கள் செந்தில், பக்கிரான், சேட்டு, கருணாகரன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூலை 11) நடைபெற்றது.