கடலூர், பிப். 17- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வா ணையத் தேர்வில் பல்வேறு முறைகேடு களில் ஈடுப்பட்டதாக கடலூர் மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதி களைச் சேர்ந்தவர்களை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடைபெற்று வரும் அதே நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாகவும் தற்போது சிபி சிஐடி காவல் துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பி எஸ்சி குரூப்-2 தேர்வில் கடலூர் மாவட்டத் தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஒரே சமூகத்தி னர் ஏராளமானோர் தேர்ச்சி பெற்றனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யது. இதில், கேள்வித்தாளை முன்னரே விலைக்கு வழங்கியது தொடர்பாக தவமணி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அரசியல்வாதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், திரைத்துறையினர் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனாலும், தவமணியை கைது செய்த தோடு இந்த விசாரணை முடித்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் விசார ணையை சிபிசிஐடி காவல் துறையினர் மீண்டும் துவங்கியுள்ளனர். கடலூர் மாவட்டம் கிழக்கு ராமாபுரத்திலிருந்து குரூப்-2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று கடலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் 12 பேருக்கு கடந்த 15 ஆம் தேதி விசார ணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 12 பேரும் வரும் 19 ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென தெரிவிக்கப் பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைப் பொறுத்த வரைக்கும் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்வாணையத் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டிற்கும், 2011 ஆம் ஆண்டில் முறை கேட்டில் ஈடுபட்ட குழுவினருக்கும் தொடர்பு இருப்பது தற்போதைய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சிபிசிஐடி வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.