tamilnadu

img

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகார் தனியார் கல்லூரி முதல்வர்களுக்கு சிபிசிஐடி சம்மன்

சென்னை, செப்.29- நீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் தேனி அரசு மருத்து வக்கல்லூரியில் படித்த சென்னை மாணவர் உதித் சூர்யா வையும் அவரது தந்தை வெங்கடேசனையும் போலீசார் கைது செய்தனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து பாலாஜி, எஸ்.ஆர்.எம். மற்றும் சத்ய சாய் மருத்துவக் கல்லூரிகளில் படித்த இரண்டு மாணவர்கள், ஒரு மாணவி ஆகியோர் அவர்களது தந்தைகளுடன் சிபி சிஐடி போலீசார் கைது செய்தனர்.  மேலும் நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு அந்தந்த பயிற்சி மையத்தில் தேர்வு பெற்ற வர்களின் விவரங்களை சிபிசிஐடி சேகரித்து வருகிறது. நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமையிடமும் விவ ரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பாலாஜி, சத்ய சாய் மற்றும் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. திங்களன்று விசார ணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டுள்ளது.