உக்ரைன் நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தன் ஓட்டுச்சீட்டை பத்திரிகைகளுக்கு காட்டிய விவகாரத்தில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் நகைச்சுவை நடிகரான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இம்மாத இறுதியில் அதிபராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அவர் வாக்களித்தபோது அவரை படமெடுத்த பத்திரிகை மற்றும் 'டிவி' கேமராக்களுக்கு அவர் ஓட்டுச்சீட்டு தெரியுமாறு, 'போஸ்' கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் உள்ளூர் நீதிமன்றத்தில் தன் செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து, அவருக்கு 2,000 ரூபாய் மதிப்பில் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.