தொலைக்காட்சி தொடர் ஒன்றில் குடியரசுத்தலைவர் கதாபாத்திரமாக நடித்த நகைச்சுவை நடிகர் வல்டிமர் ஜெலென்ஸ்கி உக்ரைன் நட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
இன்று வெளியாகியுள்ள உக்ரைன் நாட்டின் குடியரசுத்தலைவர் தேர்தல் முடிவில் 41வயதாகும் அந்நாட்டின் நகைச்சுவை நடிகர் வல்டிமர் ஜெலென்ஸ்கி வெற்றி பெற்றுள்ளார். சர்வண்ட் ஆப் தி பீப்புள் என்ற தொலைக்காட்சி தொடரில் குடியரசுத்தலைவர் கதாபாத்திரமாக நடித்தவர் நகைச்சுவை நடிகர் வல்டிமர் ஜெலென்ஸ்கி. இதற்கு முன்பு எந்த அரசியல் பின்னணியும் இல்லாத ஜெலென்ஸ்கி தற்போது உக்ரைனின் குடியரசுத்தலைவராக உள்ள பெட்ரோ பொரொசென்கோவுக்கு எதிராக மொத்தம் பதிவான வாக்குகளில் 73 சதவிகிதத்தைப் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார்.