கீவ்
ஆப்கானிஸ்தான் நாடு தலிபான்கள் கையில் சிக்கியுள்ளதால் அந்நாட்டில் உள்ள தங்கள் மக்களை உலக நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தீவிர கவனத்துடன் படுவேகமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் நாடு தனது மக்களை மீட்க ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு விமானம் அனுப்பியது. ஒரு பகுதி மக்களை ஏற்றிக்கொண்டு ஈரான் வழியாக உக்ரைன் திரும்பிக்கொண்டிருந்தது. திடீரென அந்த விமானம் ஈரான் வான் எல்லையில் காணாமல் போனது. சிக்னல் கிடைத்தாலும் விமானம் ஏன் அங்கு இறங்கியது என சந்தேகம் வலுத்தது. உடனடியாக எங்களது விமானத்தை ஈரான் நாடு கடத்தி விட்டதாக உக்ரைன் தரப்பில் இருந்து செய்தி வெளியாகியது. ஆனால் இந்த செய்தியை அரசு வெளியிடவில்லை.
இந்த செய்தி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் விமானம் உக்ரைன் தலைநகர் கீவில் கடத்தப்பட்டதாக விமானம் தரையிறங்கியது. விமானம் கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி வெறும் புரளி என தகவல் வெளியாகியுள்ளது. இதனை இரு நாட்டு தளபதிகளும் உறுதி செய்ததாக டெஹ்ரான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
காரணம் என்ன?
மேலும் விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறை இருந்ததால் தான் ஈரான் நாட்டில் விமானம் தரையிறங்கியது என ஈரான் நாட்டு ராணுவ தளபதிகள் தனி விளக்கமும் அளித்துள்ளனர்.