உக்ரைனில் நியான் வாயு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், மின்னணு சாதனங்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாம் பயன்படுத்தும் மின்னணு சாதனங்கள் அனைத்திலும் சிப் என அழைக்கப்படும் செமிகண்டக்டர்கள் தயாரிப்பில் நியான் வாயு முக்கிய இடம்பெறுகிறது. நம் அன்றாட மற்றும் அவசியத் தேவையான செல்போன், கார் உள்ளிட்ட அனைத்துக்கும் சிப் என்பது முக்கிய பொருளாக உள்ளது.
இந்த நியான் வாயு உக்ரைன் நாட்டில் உள்ள கிரையோயின் மற்றும் இங்கஸ் ஆகிய இரண்டு ஆலைகளிலிருந்து தயாரிக்கப்படும். இங்கு தயாரிக்கப்படும் நியான் தான் உலக அளவில் 50 சதவீத நியான் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் நடைபெற்று வருவதால் இந்த இரண்டு ஆலைகளிலும் நியான் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் சிப் தயாரிப்பு பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் நிலை உருவாகலாம் எனவும், மின்னணு சாதனங்களில் விலை கடுமையாக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.