திருவனந்தபுரம், மார்ச் 26- கோவிட் 19 துயரத்தின் பின்னணியில் கேரள அரசு அறிவித்துள்ள மளிகை பொருட்களுடன் சுமார் 87.14 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு இலவச ரேசன் வழங்கப்பட உள்ளன. இந்த குடும்பங்களுக்கு ஏப்ரல் மாதம் குறைந்தது 15 கிலோ ரேசன் தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். அந்தியோதயா குடும்ப அட்டைகளுக்கு 30 கிலோ அரிசியும் 5 கிலோ கோதுமையும் வழக்கம் போல் கிடைக்கும். முன்னுரிமை பிரிவினருக்கான பிங்க் அட்டைக ளுக்கு இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படும் தானியங்கள் ஒரு நபருக்கு ஐந்து கிலோ வீதம் இலவசமாக வழங்கப் படும். முன்னுரிமை அல்லாத நீலம், வெள்ளை அட்டை களுக்கு குறைந்தபட்சம் 15 கிலோ தானியம் இலவசமாக வழங்கப்படும். கோவிட் தொடர்பான கண்காணிப்பில் உள்ள குடும்பங்களின் பட்டியலை சுகாதாரத்துறை தயாரித்து வழங்கும். அதன்படி அந்த நபர்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள உணவுப்பொருட்கள் கொண்ட பைகள் இலவசமாக வழங்கப்படும். பேரிடர் நிவாரண குழுக்கள் மூலம் இந்த பைகள் வீடுகளில் நேரடியாக ஒப்படைக் கப்படும். சர்க்கரை, பயறு வகைகள், தேங்காய்எண்ணெய், சோப்பு போன்றவை இந்த பைகளில் உள்ளன.
ஏப்ரல், மே மாதங்களில் வழங்க வேண்டிய தானி யங்கள் எப்சிஐ கிடங்குகளிலிருந்து சேகரிக்கப்பட்டு வரு கின்றன. மூன்று மாதங்களுக்கு தேவையான பொருட்க ளின் பட்டியலுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள் ளது. மாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரிசியாக்கி விநியோகிக்கத் தயாராக கிடங்குகளில் உள்ளன. 74,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான தானியங்கள் வழங்குமாறு மத்திய அரசுக்கு கேரள அரசு கடிதம் அளித்துள்ளது. ரேசன் கடைகளில் ஒன்றரை மாதத்துக்கு தேவையான பொருட்கள் இருப்பு வைப்ப தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திர பயன்பாட்டை விலக்கி நேரடி பதிவு மூலம் விநியோ கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விருப்பமான கடையிலிருந்து பெறும் வசதியை பயன்படுத்துவோ ருக்கு மட்டும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டோக்கன் முறை
சிவில் சப்ளை கார்ப்பரேசன் விற்பனை நிலையங்க ளில் மக்கள் கூட்டமாக வருவதை தவிர்க்க டோக்கன் முறை அமல்படுத்தப்படுகிறது. ஊழியர்கள், விற்பனை யாளர்கள், விநியோகிப்போர் என யாருக்காவது காய்ச்சல், இருமல், ஜலதோசம் போன்ற நோய் அறிகுறி கள் இருந்தால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து ரேசன் கடைகளிலும் கைகழுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் முகக் கவசம் அணிவதும் கட்டாய மாக்கப்பட்டுள்ளது. ரேசன் அட்டைகள் ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.