சென்னை:
45 தினங்களில் வெங்காயம் விலை குறையும் என்றும் மலிவு விலையில்வெங்காயம் விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் உணவுத்துறைஅமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கனமழையால் மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடந்த சில மாதங்களாககடுமையாக உயா்ந்து வருகிறது. விலையை கட்டுப்படுத்தும் வகையில் மத்தியஅரசு எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து 10 லட்சம் டன் வெங்காயத்தைஇறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. இதனிடையே சனிக்கிழமையன்று பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின்விலை ரூ. 200-ஐ எட்டியது. இதனால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனா். இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெங்காய விலை உயர்வு நிரந்தரமானது கிடையாது. பருவநிலைக்கு ஏற்றவாறு 45 தினங்களில் வெங்காயம் விலை குறையும். வெங்காயத்தை இறக்குமதி செய்துமலிவு விலையில் விற்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.