தூத்துக்குடி, ஏப்.28-தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 1988 முதல் 1991 வரை படித்த வரலாற்றுத் துறை மாணவர்கள், 28 வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் விழா சனிக்கிழமை தூத்துக்குடி ஹோட்டல் ஆல்வின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. தங்களது நண்பர்களை பார்த்ததும் ஒருவருக்கொருவர் அன்பினை பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவுக்கு, அன்றைய கல்லூரி முதல்வர் செல்வராஜ், தலைமை வகித்தார். அவரது துணைவியார் கல்யாணி செல்வராஜ்மற்றும் வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியர்கள் சச்சிதானந்தம், ஞானஆதிக்கம், கல்லூரி பழைய மாணவர் சங்க துணைத்தலைவர் பி.எஸ்.எஸ்.ஜி.திவாகர், முன்னாள் மாணவர் சங்க தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் ராமகிருஷ்ணன் கவிதை வாசித் தார்.சென்னை, களக்காடு, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து இருந்தனர். கல்லூரியின் முன்னாள் முதல்வர் மற்றும்முன்னாள் பேராசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர் என்.வி.ராஜேந்திரபூபதி நன்றியுரை ஆற்றினார்.