சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும், இந்தியாவில் தொடர்ந்து 10-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து காணப்படுகிறது.
கோவிட்-19 பரவல் காரணமாக, உலகளவில் வர்த்தகம் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை, 10வது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு 47 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 57 பைசாவும் உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5.47 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 5.80 ரூபாயும் உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, டில்லியில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 76.73 ரூபாய்க்கும், டீசல் விலை 75.19 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கொல்கத்தாவில், 1 லிட்டர் பெட்ரோல் விலை 78.55 ரூபாய்க்கும், டீசல் விலை 70.84 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சென்னையில், 1 லிட்டர் பெட்ரோல் விலை 80.37 ரூபாய்க்கும், டீசல் விலை 73.17 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மும்பையில், 1 லிட்டர் பெட்ரோல் விலை 83.62 ரூபாய்க்கும், டீசல் விலை 73.17 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
அதே போல், விமானங்களுக்கான ஏடிஎப் எரிபொருள் விலையும் 16.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் 2-வது முறையாக விமான எரி்பொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, விமான எரிபொருள் விலை கிலோ லிட்டர் ரூ. 5,499.50 உயர்த்தப்பட்டு, டெல்லியில் ரூ. 39,069.87 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.