தமிழகத்தில் உள்ள நோக்கிய நிறுவனத்தின் தொலைத்தொடர்பு உற்பத்தி ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொலைத் தொடர்பு கியர் உற்பத்தி ஆலையில், ஊழியர்களுக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டதால் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எத்தனை ஊழியர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டார்கள் என்கிற விவரத்தினை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், குறைந்தது 42 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.