tamilnadu

img

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் கிழக்குப்பகுதியில் உள்ள அம்போன் தீவில் இருந்து சுமார் 200கி.மீ தெற்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை உள்ளூர் நேரப்படி 11.53 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. மேலும் இந்தோனேசியாவின் சவும்லாக்கி பகுதியில் இன்று 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. 
இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதவிபரங்கள் இதுவரை வெளியாக வில்லை.  இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.