2020-ல் இந்தியாவின் பொருளாதாரம், 4.5 சதவீதம் வரை சரியும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் ஏற்கனவே சரிவு கண்டு வந்த நிலையில், தற்போது கோவிட்-19 பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2020-ல் இந்தியாவின் பொருளாதாரம், 4.5 சதவீதம் வரை சரியும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. அதே போல், 2021-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என்றும், இது ஏப்ரல் மாதத்தின் கணிப்பை விட 1.4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், உலகளவில் பொருளாதார வளர்ச்சி 4.9 சதவீதமாக இருக்கும். இது ஏப்ரல் மாதத்தில் உலக பொருளாதார அவுட்லுக் கணித்ததை விட 1.9 சதவீதம் குறைவாக இருக்கும் என்றும், 2021-ல் இதுவே 5.4 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.