tamilnadu

img

அமேசான் காட்டுத்தீயை அணைக்க ஜி7 நாடுகளின் உதவ தேவையில்லை - பிரேசில் பிடிவாதம்

உலக அளவில் 20 சதவீத ஆக்சிஜனை வெளியிடுவது அமேசான் காடுகள் .  இதனால்  உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகளின் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.  8 நாடுகளில் பரந்து விரிந்துள்ள அமேசான் காடுகளின் பெரும்பாலான பகுதிகள் பிரேசில் மற்றும் பொலிவியாவில் தான் உள்ளன. சர்வதேச  அழுத்தத்தை தொடர்ந்து பிரேசில் அதிபர் போல்சனாரோ காட்டுத் தீயை கட்டுப்படுத்த  இராணுவத்தை ஈடுபடுத்த உத்தரவிட்டார்.

இந்த முயற்சியில்  44,000 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளதுடன், ஏழு மாநிலங்களில்  தீயை அணைக்க ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் கொட்டுவதற்கு போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க, ரூ.160 கோடி நிதி உதவி வழங்க தயராக இருப்பதாக ஜி 7 நாடுகள் அறிவித்தன. இந்த அறிவிப்பை அடுத்து சர்வதேச நிதியை நிராகரித்த பிரேசில் ஜனாதிபதி போல்சோனாரோ, தங்கள் நாட்டின் இறையாண்மையின் மீது அமேசானை காரணமாக வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றம் சாட்டினார். பிரேசிலை யாருமற்ற காலனி பிரதேசமாக கருத வேண்டாம் என்று கூறியுள்ள பிரேசில் ஜனாதிபதி உலகநாடுகளின் உதவியை நிராகரித்துள்ளார்.