tamilnadu

img

கொரோனாவுக்கு அமேசான் மலைக்காடுகளும் தப்பவில்லை...

சான்டோ அன்டோனியா டூ நான் (பிரேசில்):
மழைக்காடுகள் என்றழைக்கப்படும் அமேசான் காட்டில் வாழும் ஒரு பழங்குடியின பெண்ணுக்‍கு கொரோனோ நோய்த்தொற்று இருப்பதை பிரேசில்  சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. உலகத் தொடர்பு அதிகமில்லாத காட்டுப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா  உலகத் தொடர்பு அதிகம் இல்லாத பிரேசில் நாட்டின் அமேசான் காட்டிலும் தற்போது நுழைந்துள்ளது. அமேசான் காடுகளின் பெரும் பகுதி பிரேசிலில்தான் உள்ளது. இந்தக் காடுகளில்  ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அமேசான் காட்டில் வசிக்கும் கொகமா பழங்குடியின பெண்ணை கொரோனா தாக்கியுள்ளது. அவருக்கு வயது 20. கொமா பழங்குடியினர் வசிக்கும் பகுதி சான்டோ அன்டோனியா டூ நான் மாவட்டமாகும். மாவட்டத்  தலைநகரான மானாசிவிலிருந்து (அமோசன் காட்டிலிருந்து) 880 கி.மீ. தொலைவில் கொலம்பியா நாட்டு எல்லையையொட்டி அமைந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண், ஒரு மருத்துவரிடம் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். அவர் 15 மருத்துவப் பணியாளர்கள்,  12 நோயாளிகளிடம் தொடர்பில் இருந்துள்ளார். அவர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்பட்டதில் இவர் ஒருவருக்கு மட்டுமே நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொலம்பியா, பெரு நாடுகளின் எல்லையையொட்டி அமைந்துள்ள மேல் அமேசான் பகுதியில் மட்டும் சுமார் 30,000 பழங்குடியினர் வசித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் ஒரு மருத்துவர் உட்பட நான்கு பேருக்கு தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளன.