tamilnadu

மத்திய அமைச்சரவைச் செயலராக ராஜிவ் கவுடா?

புதுதில்லி, மே 28-மத்திய அரசின் அமைச்சரவை செயலாளராக ராஜிவ் கவுபா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மத்திய அமைச்சரவை செயலாளராக பணியாற்றி வரும் பி.கே.சின்காவின் பதவிக்காலம் வருகிற ஜூன் 12ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், மத்திய உள்துறைச் செயலாள ராக பணியாற்றி வரும் ராஜிவ் கவுபா அப்பதவிக்கு நியமனம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.1982ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வுபெற்ற ராஜிவ் கவுபா மத்திய அரசின் பாதுகாப்பு, நிதி உள்ளிட்ட துறை களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.