பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத்திலும் (International Space Station) விண்வெளி கலங்களிலும் (Space Shuttle) வசிக்கும் வீரர்களில் ஐம்பது சதவீதத்தினருக்கு உடலினுள்ளே மறைந்திருக்கும் அக்கி(herpes) எனும் தோல் நோய் செயல்படத் தொடங்குகிறதாம்.நாசா நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்கி என்பது HSV (herpes simplex virus) எனும் நுண் கிருமியினால் ஏற்படும் தொற்று நோய். இது நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் நோயாக வெளியே தெரியாது.இதை குணப்படுத்த நேரடியான மருந்துகள் இல்லையாம். வலி நிவாரணி, கிருமி பரவாமல் தடுக்கும் மருந்துகள், விளைவுகளை கட்டுப்படுத்தும் மருந்துகள் போன்றவற்றையே மருத்துவர்கள் தருகிறார்கள். உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்.கைவைத்தியமும் செய்யலாம்.இது சிலருக்கு மீண்டும் மீண்டும் வரும்.ஆனால் அப்பொழுது கடுமையாக இருக்காது.
சரி ஏன் விண்வெளி வீரர்களுக்கு வருகிறது? விண்வெளி பயணத்தின்போது அவர்கள் உடலில் அழுத்தம் தொடர்பான ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை அவர்களின் நோய் தடுப்பு பிரிவை (immune system) சரியாக செயல்படவிடுவதில்லை என்கிறார் இந்த ஆய்வின் ஒரு உறுப்பினரான சதீஷ் மேத்தா.