tamilnadu

img

கொரோனா பீதி எதிரொலி...  பிரேசிலில் 1500 கைதிகள் தப்பியோட்டம் 

பிரேசிலியா
உலகத்தை மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. 7,000-க்கும் அதிகமானோரை விழுங்கியுள்ள இந்த கொரோனா வைரஸ் தென் அமெரிக்கா கண்டத்தில் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது.   

தென் அமெரிக்கக் கண்டத்தின் மிகப்பெரிய நாடான பிரேசிலில் 200-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத் தீயாய் பரவ சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள 4 சிறைச்சாலைகளில் 1500-க்கும் அதிகமான கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர். இவர்களில் பலர் பிடிபட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.