tamilnadu

img

பிரான்சில் 22-ஆம் முதல் ஊரடங்கு தளர்வு...  

பாரிஸ் 
ஐரோப்பா நாடான பிரான்சில் கடந்த 2 வார காலமாக கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைந்துள்ளது. இதுவரை 1 லட்சத்து 57,220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29 ஆயிரத்து 407 பேர் பலியாகியுள்ளனர். 72 ஆயிரத்து 859 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இன்னும் 54 ஆயிரத்து 954 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் வரும் 22-ஆம் தேதி முதல் பிரான்சில் ஊரடங்கு முற்றிலும் விலக்கப்படுவதாகவும், பள்ளிகள், கல்லூரிகள், உள்நாட்டு பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அந்நாட்டின் பிரதமர் இம்மானுவேல் மக்ரான் தெரிவித்துள்ளார். 
எனினும் ஐரோப்பா கண்டத்தில் மட்டுமே பொதுமக்கள் பயணிக்க வேண்டும். ஜூலை 1-ஆம் தேதி முதல் ஐரோப்பா கண்டத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு போக்குவரத்து சேவை தொடங்கப்படும். தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ்  உள்ள ஆட்சி பகுதியான பிரெஞ்ச் கயானா, மயோட தீவுகளுக்கு ஊரடங்கு தளர்வு கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது பிரான்சில் கொரோனா வைரஸ் 2-ஆம் கட்ட ஆட்டத்தை தொடங்கியுள்ளது. நேற்று 407 பேர் பாதிக்கப்பட்டு 9 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.