tamilnadu

img

வெளியூர் செல்ல இபாஸ் தேவையில்லை: ஊரடங்கு தளர்வின் முக்கிய 10 அம்சங்கள்

ஊரடங்கு தளர்வின் முக்கிய 10 அம்சங்கள்

1.இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

2.யோகா மையங்கள், உடற்பயிற்சி மையங்கள் ஆகியவற்றை வரும் 5-ம் தேதி  முதல் திறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

3.தனிநபர் இடைவெளி மற்றும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4.வந்தே பாரத் திட்டத்தின்கீழ் குறைந்த அளவில் சர்வதேச விமானப் பயணத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

5.மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்கு உள்ளே பொதுமக்கள் செல்லவும், சரக்குகளை கொண்டுசெல்லவும் எந்தத் தடையும் இல்லை. இதற்காக தனியாக அனுமதியோ, இ-பாஸோ தேவையில்லை.  எனினும், இதில் கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம்

6.மெட்ரோ ரயில், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பார்கள், கலையரங்குகள் போன்றவை செயல்பட அனுமதியில்லை.

7.இதேபோல, சமூக, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை நீடிக்கிறது.

8.கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அடுத்த மாதம் 31-ம் தேதிவரை ஊரடங்கை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

9.65வயதுக்கு மேற்பட்ட முதியோர், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவயதினர் மற்றும் கர்ப்பிணிகள் வீட்டிலேயே இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10.பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களை திறப்பதற்கு அடுத்த மாதம் 31-ம் தேதிவரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.