tamilnadu

img

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு குறைகிறது...

மாஸ்கோ 
உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் ஏப்ரல் மாத கடைசியிலிருந்து இன்று வரை கொரோனா பரவல் வேகம் ஜெட் வேகத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வருவதால் கொரோனாவுக்கான உலக அட்டவணையில் குறுகிய காலத்தில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.  

இந்நிலையில் ஆறுதல் அளிக்கும் விதமாக அந்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு 8 ஆயிரத்துக்கு மேல் பாதிப்பு ஏற்படும் நிலையில், இன்று 7 ஆயிரத்து 843 ஆக உள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 5 லட்சத்து 53 ஆயிரத்து 301 ஆக உள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 194 பேர் பலியாகியுள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 478 ஆக உயர்ந்துள்ளது. 3.04 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.