மெல்போர்ன்
பசிபிக் பெருங்கடலையும் அதனைச் சூற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள தீவுகளையும் ஓசியானியா என்றும் ஆஸ்திரேலிய கண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. உலகில் உள்ள 6 கண்டங்களில் இதுவும் ஒன்று. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிஜி, பப்புவா நியூ கினியா போன்ற நாடுகளும், 10-க்கும் மேற்பட்ட குட்டித்தீவுகளும் உள்ளன.
உலகில் உள்ள 5 கண்டங்களை கொரோனா வைரஸ் புரட்டியெடுத்து வரும் நிலையில், ஓசியானியா கண்ட பகுதி மட்டும் கம்பீரமாக கொரோனா பரவலை ஒழித்து வருகிறது. இதற்கு முக்கிய பங்காற்றிய நாடு ஆஸ்திரேலியா தான். கொரோனா எழுச்சி பெற்ற காலத்திலேயே தன்னுடைய நாட்டின் எல்லையை அதிரடியாக மூடியது. தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் அதனைச் சுற்றியுள்ள குட்டி நாடுகள் கடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாகவே ஓசியானியாவில் கொரோனா பரவல் மிக குறைவாக உள்ளது. தற்போதைய நிலையில், அந்த மண்டலத்தில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிரெஞ்சு போலிநேசியா, பப்புவா நியூ கினியா, நியூ காலேடோனியா ஆகிய நாடுகளில் மட்டுமே கொரோனா பரவியுள்ளது. மற்ற நாடுகளில் கொரோனா பரவல் இல்லை.
ஓசியானிய கண்டத்தில் ஆஸ்திரேலியாவில் 6 ஆயிரத்துக்கும் பாதிக்கப்பட்டு, 79 பேர் பலியாகியுள்ளனர். நியூஸிலாந்தில் 1,456 பேர் பாதிக்கப்பட்டு 17 பேர் பலியாகியுள்ளனர். மற்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு சுமாராக இருந்தாலும் பலி எண்ணிக்கை இல்லை. உலகமே கொரோனவை எதிர்த்துப் போரிட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலிய கண்டம் கொரோனவை கட்டிப்படுத்தி புதிய வரலாறு படைத்துள்ளது.